புதுவையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரைக்கு புறப்பட்ட பக்தர்களை படத்தில் காணலாம்
புதுவையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்
- திருமண மண்டபத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
- புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை வெங்கடேச பெருமாள் பக்தஜனசபையினர் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி பாத யாத்திரை செல்கின்றனர்.
31-வது ஆண்டு பாதயாத்திரைக்கு கடந்த மாதம் புரட்டாசி 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.
காலை 5 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு டி.பி.ஆர். திருமண மண்டபத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
யாத்திரையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
வெங்கடேச பெருமாள் பக்த ஜனசபை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பக்தஜனசபை நிர்வாகிகள் ஸ்ரீசைலேசன், பூபதி, கணபதி, ஏழுமலை, ஜெயகாந்தன், கண்ணன், தட்சணாமூர்த்தி, ராமானுஜதாசன், கணபதி, சிவராமன், செந்தில், அன்பழகன், ஜெயமூர்த்தி, சிவராஜ், பாவாடை, ரமேஷ், பாகவதர்சம்பந்தம், பாலாஜி சிவகலைபாரதி, அருண், அருண்பிரசாத், பிரகாஷ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.