புதுச்சேரி

மின் துறையை கண்டித்து கோட்டக்குப்பம் நகராட்சி எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

தொடர் மின்வெட்டை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-15 11:38 IST   |   Update On 2023-06-15 11:38:00 IST
  • துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக மின்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
  • மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும் கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி:

கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தத்துடன் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கட்சியினர் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மின்வெட்டு காரணமாகவும் மாநில செயலாளர் முஸ்காதீன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், குறைந்த மின் அழுத்தத்துடன் மின்சாரம் விநியோகிக்க ப்படுவதாகவும் கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

போர்க்கால அடிப்படையில் மின்சார பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் மின் துறை சார்பாக போராட்டக் காரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் வருகின்ற 2024-ம் ஆண்டுக்குள் கோட்டகுப்பம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக மின்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

இந்தப் போராட்டத்தில், புதுவை மாவட்ட தலைவர் சகாபுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட தொண்டரணி செயலாளர் நாகூர் கணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹபீப் முஹம்மது, மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகர தலைவர் அபுதாஹிர் த.மு.மு.க. நகர செயலாளர் ஜரித் ம.ம.க. நகர செயலாளர் நஜிர் அஹமது, நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர செயலாளர் ஹாஜதுல்லா அப்துல் ஜப்பார், அசேன் ஆபிதீன், அபுல் ஹசன், அமீன், மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News