புதுச்சேரி
கோப்பு படம்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா கண்டன உரையாற்றினர்.
- சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமீல் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அண்ணாசாலை சந்திப்பில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூரில் பழங்குடியின மக்கள் இன அழிப்பை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசியக்குழு உறுப்பினர் இனாமுல்ஹசன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா கண்டன உரையாற்றினர்.
தமிழ்நாடு சமூக நல்லிணக்க முன்னணி தலைமை ஆலோசகர் ராஜன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், வி.சி.க. தேவபொழிலன், மாநில தலித் பழங்குடி கூட்டமைப்பு ராமசாமி, மீனவர் சங்கம் பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமீல் நன்றி கூறினார்.