புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவர்களுக்கு சுவையான உணவு

Published On 2023-06-10 08:52 GMT   |   Update On 2023-06-10 08:52 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
  • தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒரு அரசு பள்ளி மாணவர் வந்து பேசினார். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கலவை சாதம் நன்றாக உள்ளது. ஆனால் சாம்பார் சாதம் நன்றாக இல்லை. சாம்பார் சாதம் வழங்கும் நாளில் சரியாக அரிசி வேகவில்லை, சுவையும் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்தார்.

ஏற்கனவே அக்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும்.

இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் பகுதிநேர ஊழியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சியினரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதம் சுவையாக இல்லை என சட்டசபையில் புகார் கூறியிருந்தனர். தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் அக்சய பாத்திரம் நிறுவனத்தினரை அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வழங்க முடியுமா? என அமைச்சர் ஆலோசித்து வருகிறார். 

Tags:    

Similar News