பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பை
- 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
பிளாஸ்டிக் பயன்பா ட்டை தடுக்க வலியுறுத்தி துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி அனைத்து சமூக பேரமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை அருகில் மீனாட்சி கணேஷ் பொது சேவை இயக்கம் தயாரித்த 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து சமூக பேரமைப்பின் கௌரவ தலைவர் புதுவை குமார் தலைவர் இளங்கோ ,செயலாளர் சசிகுமார் மற்றும் வில்லியனூர் ராணி, அறம் நிஷா செய்திருந்தனர்.
உடன் காலாபட்டு தொகுதி தலைவர் மணிகண்டன் , வடக்கு ஒன்றியம் முன்னாள் செயலாளர் பாரதிராஜா , சமூக சேவகர் உடையார்பாளையம் மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.