புதுச்சேரி
கோப்பு படம்.
சேவைகளை பெற ஆன்லைனில் நுகர்வோர் விண்ணப்பிக்கலாம்-மின்துறை அறிவிப்பு
- இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலுக்கு பின் நுகர்வோர் பாதுகாப்புக்காக புதுவை மின்துறை இணையதளம், செல்போன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதிகளை செய்தது.
தற்போது மின்துறையின் அனைத்து சேவைகளையும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில்;- மின் கட்டணம் மட்டுமின்றி, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், இடமாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இனி இணையதளம் வழியாக ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனைத்து சேவைகளையும் விரைவாக பெற முடியும். இதற்கு நுகர்வோர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தனர்.