புதுச்சேரி

கோப்பு படம்.

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-25 10:51 IST   |   Update On 2023-05-25 10:51:00 IST
  • வில்லியனூரில் சோக சம்பவம்
  • அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

புதுச்சேரி:

வில்லியனூர் அடுத்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன.

  ஆனால் உடல்நலக்குறைவால் அந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போனது. இதனால் சுந்தரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த சோகத்தை மறக்க மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

தினமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மஞ்சுளா வில்லியனூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஏற்கனவே குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த சுந்தரம் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை வழக்கம் போல் மஞ்சுளா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

அதன் பின்னர் சுந்தரம் வீட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News