புதுச்சேரி

தேசிய அளவிலான நடன போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவ-மாணவிகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.

புதுவை மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை- சபாநாயகர் வாழ்த்து

Published On 2023-01-02 09:37 IST   |   Update On 2023-01-02 09:37:00 IST
  • இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.
  • புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.

புதுச்சேரி:

இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.

இதில் தேர்தேடுக்கப்பட்ட புதுவை நடன மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட னர். இப்போட்டியில் பிரிஸ்டைல் மற்றும் சால்சா பிரிவில் தனிஷ், கார்த்திகா, எரின் ரிச்சல் ஆகியோர் தங்க பதக்கமும், சோனாக்ஷி வெள்ளிபதக்கமும், லிசி, துர்கா, தேவி, பாவித்ரா, காயத்ரி வெண்கலபதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

இவர்கள் அனைவரும் புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.

இதில் பயிற்சியாளர்கள் செந்தில், கொவிந், ஜான்சன், சங்க நிர்வாகிகள் செல்வம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை பொருளாளர் சிலம்பரசன் செய்திருந்தார்.

Tags:    

Similar News