கோப்பு படம்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
- புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ெரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்து நடந்த உடனே ெரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவிய உள்ளூர் மக்கள், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தழைக்கட்டும் மனித நேயம்.ெரயில்வே விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.