புதுச்சேரி

 வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய காட்சி.

அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Published On 2023-11-18 06:20 GMT   |   Update On 2023-11-18 06:20 GMT
  • முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் பரிசு வழங்கினார்
  • சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலரும் சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் சில்வர் வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி, திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி மற்றும் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News