புதுச்சேரி

திருமணம் செய்ய வலியுறுத்தி செல்போனில் நிர்வாண வீடியோ அனுப்பி பெண்ணுக்கு மிரட்டல்- சென்னை வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2023-08-02 13:47 IST   |   Update On 2023-08-02 13:47:00 IST
  • ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது.
  • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் செயலி மூலம் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவியில் இந்த செயலி மூலம் இருவரும் தகவல்களை அனுப்பி பரிமாறிக்கொண்டு வந்தனர்.

பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி வந்தனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது. இதனை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த பெண்ணுக்கு அணுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News