புதுச்சேரி

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

லட்சுமி நரசிம்மர்கோவிலில் தேரோட்டம்

Published On 2023-05-04 14:27 IST   |   Update On 2023-05-04 14:27:00 IST
  • நரசிம்ம ஜெயந்தி என்பதால் கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பங்கேற்று ஹோமம் செய்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். நரசிம்ம ஜெயந்தி என்பதால் கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 7-ந் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்கள், சிங்கிரிகுடி கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்த னர்.

நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு பூவரங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை, 4 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமி கோவில் புறப்பாடு நடக்கிறது.

சுவாதி நட்சத்தி ரத்தையொட்டி திரு மஞ்சனம், சுதர்சன ஹோமம் நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பங்கேற்று ஹோமம் செய்கின்றனர்.

ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி மதனா, அர்ச்சகர் பார்த்த சாரதி செய்துள்ளனர். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா இன்று நடந்தது. காலை 10 மணிக்கு நவ நரசிம்மர்கள், பானக நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சேவை சாற்றுமுறை நடந்தது.

இன்று இரவு 7 மணிக்கு மேல் 11 நரசிம்மர்களும் மங்களகிரி விமானத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடக்கிறது.

இதேபோல புதுவையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருமஞ்சனம், சேவை சாற்று முறை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News