புதுச்சேரி

புதுவை மீன் வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாகி துறைமுக பகுதியை ஆய்வு செய்த காட்சி.

மீனவர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்

Published On 2023-06-11 10:40 IST   |   Update On 2023-06-11 10:40:00 IST
  • கடலோர சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஆகியோருடன் மந்திய மந்திரிகள் கலந்துரையாடினர்.
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாகி துறைமுக பகுதியை ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி:

"சாகர் பரிக்ரமா" என்ற கடலோர பயண நிகழ்ச்சியை இந்திய அரசின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி புதுவையின் மாகி பிராந்தியத்திற்கு மத்திய மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாகி சென்றனர். அவர்களை புதுவை மீனவளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். அதனை தொடர்ந்து அங்குள்ள மீனவர்கள், கடலோர சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஆகியோருடன் மந்திய மந்திரிகள் கலந்துரையாடினர்.

அதன் பின்னர், மத்திய மந்திரிகளுடன், புதுவை மீன் வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் மாகி துறைமுக பகுதியை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாகி பிராந்திய நிர்வாகி சிவ்ராஜ் மீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News