புதுச்சேரி

ஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி.கேமரா பொருத்த வேண்டும்

Published On 2023-06-13 11:26 IST   |   Update On 2023-06-13 11:26:00 IST
  • காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
  • புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளரும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.

மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தமிழ்நாடு-புதுவை ஒருங்கிணைப்பாளர் ஆசீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு தினேஷ் பொன்னையா, மே 17 இயக்கம் மதிவாணன், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் டி.வி.நகர் ராஜா, மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுவை போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது.

போலீஸ் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே வழங்க வேண்டும்.

புதுவையில் இயங்கி வந்த காவல் புகார் ஆணையம் வருடாந்திர கூட்டங்களை நடத்தி அதன் அறிக்கையை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News