புதுச்சேரி

கோப்பு படம்.

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம், முதலீடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

Published On 2023-05-08 07:58 GMT   |   Update On 2023-05-08 07:58 GMT
  • முதல் அமைச்சருக்கு அ.தி.மு.க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
  • பினாமிகள் பெயரில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவையில் லட்சக் கணக்கான அ.தி.மு.க தொண்டர்களின் உழைப் பாலும், அவர்கள் அளித்த வாக்காலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது.

பதவி வந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களையும், மக்களையும் மறந்து சுயநலமாக செயல்படுவது நல்லதல்ல என முதல் அமைச்சருக்கு அ.தி.மு.க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

அரசின் திட்டங்களுக்கு துணை நிற்காமல் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், 2 ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல், சுயநலத் தோடு செயல்படும் அமைச்சர் களை இனம் கண்டு அமைச்சர வையில் தேவையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க மாநில செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மதுபான தொழிற்சா லைகள் அமைக்க அனுமதி வழங்கியது, ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார் அமைக்க அனுமதி வழங்கியது, நள்ளிரவிலும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது, தரமற்ற சாலைகள் அமைத்தது, மின்துறை தனியார்மயம் என அரசின் பல்வேறு துறைகளிலும் சுயநலம் மற்றும் சுயலாப போக்கோடு அமைச்சர்கள் செயல் பட்டுள்ளது நிரூபணமாகி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளுக்கு புதுவை அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களின் லாபத்தை பினாமிகள் பெயரில் முதலீடு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே முதல்-அமைச்சர் தானாக முன்வந்து, கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்களின் வெளி நாட்டு சுற்றுப்பயணம், பினாமிகள் பெயரில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News