புதுச்சேரி

கோப்பு படம்.

பாசிக்கில் தக்கை பூண்டு கொள்முதல் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை-அங்காளன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-20 08:38 GMT   |   Update On 2023-03-20 08:38 GMT
  • பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
  • பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன், 2018-ல் வேளாண்துறையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைபூண்டு வழங்க கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளியில் குறைந்த விலை நிர்ணயித்த நிறுவனத்தின் பெயர், விபரம் என்ன? கொள்முதல் விலை, விற்பனை விலை என்ன? தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவனம் நிர்ணயித்த கொள்முதல் விலை நிர்ணயித்த விலைக்கும் வித்தியாசம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், 2018-ம் ஆண்டு 20 மெட்ரிக் டன் விவசாயிகளுக்கு வழங்க தனியார் நிறுவனத்திடம் தக்கை பூண்டு கொள்முதல் செய்யப் பட்டது. கொள்முதல் விலை ரூ.51.30, விற்பனை விலை ரூ.53.90. தமிழக அரசின் கொள்முதல் விலைக்கும், பாசிக் நிறுவன கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.23.70. ஆனால் இந்த கொள்முதல் விலையை ஒப்பிட இயலாது.

இதில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றார். மீண்டும் குறுக்கிட்ட எம்.எல்.ஏ. அங்காளன், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய காரணம் யார்? அவர்கள் மீது அரசு ந டவடிக்கை எடுத்ததா? இதுதொடர்பான கோப்புகள் அனைத்தையும் சபாநாயகர் அறையில் வைக்க வேண்டும். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News