கோப்பு படம்.
போலி பத்திரம் தயாரிக்க உதவிய சார்பதிவாளர்- 5 பேர் மீதுவழக்கு
- 2 மனைகளை விற்பனை செய்யாமல் தங்களது பராமரிப்பில் வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
- பொது அதிகார பத்திரம் தயார் செய்திருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் ரமேஷ். இவரின் தந்தை நடராஜன் மற்றும் ஜந்தார்க்மேரி ஆகியோர் கருவடிகுப்பம் அன்னை நகரில் உள்ள நிலத்தை ஜானகிராம் என்பவரிடம் இருந்து கிரயம் பெற்றுள்ளனர்.
பின்னர் இருவரும் அந்த இடத்தை மனை களாக பிரித்து விற்பனை செய்தனர். அதில் 2 மனைகளை விற்பனை செய்யாமல் தங்களது பராமரிப்பில் வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
நடராஜன் இறந்ததால், ஐந்தார்க் மேரி இரு மனைகளையும் நடராஜன் மனைவி மீரா என்பவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தார்.
மீரா பராமரிப்பில் இருந்த 2 மனைகள் மீது அவரின் மகன் நடராஜன் ரமேஷ் வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்தபோது, 3 பேர் மீரா எழுதி கொடுத்த மாதிரி போலியாக பொது அதிகார பத்திரம் தயார் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நடராஜன் ரமேஷ், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலியான பத்திரம் தயார் செய்ததாக அப்போதைய சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.