விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பரதநாட்டியமாடிய மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கம்பன் கலை அரங்கத்தில் பரதநாட்டியம் அரங்கேற்றம்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
- கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலை அரங்கத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுந்தர நாட்டிய கேந்திர மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பரதநாட்டியம் அரங்கேற்றம் நடனம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுத்து நினைவு பரிசினை வழங்கி வாழ்த்தி பாராட்டினார்.
விழாவிற்கு மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்பாக பரத நாட்டியமாடிய மாணவிகளை வாழ்த்தி பேசினார்.சுந்தர நாட்டிய கேந்திர குரு சுந்தரமூர்த்தி மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை நிகழ்ச்சி சுமார் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டுகளித்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் ஜீவா பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.