புதுச்சேரி

கோப்பு படம்.

நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல்

Published On 2023-08-20 10:54 IST   |   Update On 2023-08-20 10:54:00 IST
  • சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது நிலத்தை யொட்டி உள்ள பகுதியில் தென்னங்கன்று நட்டார்.
  • கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கீழ்சாத்த மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது39). விவசாயி.

இவரது நிலத்துக்கு பக்கத்தில் அேத பகுதியை சேர்ந்த ராமமூர்த்திக்கு நிலம் உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது நிலத்தை யொட்டி உள்ள பகுதியில் தென்னங்கன்று நட்டார்.

இந்த நிலையில் கிருஷ்ணன் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றுக் கொண்டி ருந்த போது அங்கு வந்த ராமமூர்த்தி எதற்காக எனது நிலத்தில் தென்னங்கன்றை நட்டாய் என தகராறு செய்து கிருஷ்ணனை தாக்கினார்.

இதையடுத்து கிருஷ்ணன் அருகில் உள்ள கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மருத்துவ மனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களான சவுந்தரராஜ், வேதமணி மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News