புதுச்சேரி

கோப்பு படம்.

திறமையற்றவர்களை நிர்வாகிகளாக நியமித்ததேஸ்பின்கோ நூற்பாலை வீழ்ச்சிக்கு காரணம்

Published On 2023-05-03 10:57 IST   |   Update On 2023-05-03 10:57:00 IST
  • முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
  • வங்கிகள் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தை வைத்து கடன் தர தயாராக உள்ளன.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருபுவனையில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலைக்கு மூடுவிழா நடத்த முதல்-அமைச்சர் காய்நகர்த்தி வருவதாக தெரிகிறது. ஸ்பின்கோ நிறுவனம் அடிப்படையில் கூட்டுறவு நிறுவனம். அதை கூட்டுறவு தத்துவத்தின்படி தேர்தல் நடத்தி நிர்வாக குழு அமைக்காமல், நிர்வாக திறமையற்றவர்களை நிர்வாகிகளாக நியமித்ததே மில்லின் வீழ்ச்சிக்கு காரணம்.

இந்த ஆலையின் கடனுக்காக கூட்டுறவு தலைமை வங்கியில் நிலம் அடமானம் வைக்கப்பட்டது. அந்த வங்கி நிலத்தை அதிக விலைக்கு விற்று கணிசமான லாபம் பார்த்துள்ளது. அந்த லாபத்தை ஆலைக்கு வாங்கித்தர முதல்-அமைச்சர் மறுத்துவிட்டார். பஞ்சு விலை உயர்ந்திருந்தபோது லேஆப் கொடுத்த அரசு விலை குறைந்தபோது ஆலையை திறந்திருக்கலாமே?

பலமாதமாக பஞ்சு விலை குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் கூடுதல் வேலை செய்ய சம்மதம் தெரிவிக்கின்றனர். எந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன. வங்கிகள் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தை வைத்து கடன் தர தயாராக உள்ளன. எனவே அரசு ஆலையை உடனடியாக திறந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News