புதுச்சேரி
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்
- ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.
புதுச்சேரி:
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பசியாற உணவு அளிக்க வேண்டும் என்று, விஜய் மக்கள் இயக்க தலைவர் முன்னாள்
எம்.எல்.ஏ புஸ்சி ஆனந்த் உத்தரவின் பேரில் திருபுவனை தொகுதி இளைஞர் அணி தலைவர் ராஜா ஏற்பாட்டின் படி, திருபுவனையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் அசோக், பொருளாளர் மணி கண்டன், மற்றும் மன்ற நிர்வாகிகள் மணி, ஜீவா, எத்திராஜ், மணிகண்டன், ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.