புதுச்சேரி

எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு எதிரே பள்ளம் தோண்டப்பட்டு சாலை அமைக்கப்படாமல் உள்ள காட்சி.

அலுவலகம் செல்ல முடியாமல் அங்காளன் எம்.எல்.ஏ. தவிப்பு

Published On 2022-12-08 11:51 IST   |   Update On 2022-12-08 11:51:00 IST
  • சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.
  • இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்க ளுக்கு நேரில்செ ன்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.

புதுச்சேரி:

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் மதகடிப்பட்டு பகுதியும் அடங்கும். இந்த சாலை அருகில்தான் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்ல முடியும்.

தற்பொழுது சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாதவாறு பள்ளங்களை தோண்டினர்.

கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தில் பணி செய்யாமல் தொழிலாளர்கள் விட்டு விட்டனர். இதனால் சட்டமன்ற அலுவலகத்திற்கு வர முடியாமல் அங்காளன் எம்.எல்.ஏ. தவித்து வருகிறார்.

இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு நேரில்சென்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.

ஆனாலும் பொதுமக்கள் எம்.எல்.ஏ.வை சிரமம் இன்றி பார்ப்பதற்கும் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கும் வழிவகை இல்லாமல் தற்போது உள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டிய அங்காளன் எம்.எல்.ஏ. சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் தனது அலுவலகத்திற்கு செல்லும் வகையில் உடனடியாக சாலை பணியை முடித்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இன்றுவரை அப்பணி சரி செய்யப்படா மலே உள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அந்தப்

பகுதியில் சாலை வசதி செய்து மக்கள் சிரமம் இன்றி சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News