புதுச்சேரி

அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்

Published On 2023-06-09 11:14 IST   |   Update On 2023-06-09 11:14:00 IST
  • புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது

புதுச்சேரி:

புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு தெற்கு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி.ஆறுமுகம் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், மற்றும் நிர்வாகிகள் ரகுபதி, ராஜா, கலைவாணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமாரவேல், தனவேலு, ராமச்சந்திரன், ரத்தினகுமார், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்கும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதுவை மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News