புதுச்சேரி

கோப்பு படம்

ஆல் இண்டியா ரேடியோ பெயர் மாற்றம் - சிந்தனையாளர்கள் பேரவை கண்டனம்

Published On 2023-05-05 14:24 IST   |   Update On 2023-05-05 14:24:00 IST
  • நமது நாட்டின் 98 சதவிகித மக்களையும் 95 சதவிகித நிலப்பரப்பையும் உலக அளவில் 120 நாடுகளையும் சென்றடைகின்றன.
  • ஆகாசவாணி என இந்தியில் அழைக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசு பிரசார் பாரதி ஒலிபரப்புக்கழகத்தின் மக்கள் தொடர்பு சாதனமான அகில இந்திய வானொலி நிலையம் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி அறிக்கைகள், நமது நாட்டின் 98 சதவிகித மக்களையும் 95 சதவிகித நிலப்பரப்பையும் உலக அளவில் 120 நாடுகளையும் சென்றடைகின்றன.

இந்த நிறுவனம் ஆல் இண்டியா ரேடியோ என வெள்ளையர் காலம் தொட்டு அழைக்கப்பட்டா லும் இடையிடையே இதனை பல்வேறு மொழிகள் பேசும் நாட்டின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் நோக்கில் ஆகாசவாணி என இந்தியில் அழைக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களின் அடாவடி செல்லுபடியாக வில்லை. மேலும் ஆங்கிலச்செய்திகளில் ஆல் இண்டியா ரேடியோ என்றே அழைக்கபடுவது சட்டப்படி ஏற்றுக்கொள்ள ப்பட்ட நடைமுறையாகும். தற்போது இதற்கு மத்திய அரசு தனது ஓர் அலுவலக ஆணைமூலம் தடை போட்டுள்ளது.

இதன்படி ஆங்கில செய்திகள் மற்றும் இதன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆகாசவாணி என்றே இந்தியில் இனி அழைக்கவேண்டும் என கடுமை யாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்று ஏற்கனவை ஆணைகள் வந்த போது கடும் போராட்டங்களை சந்தித்தது. தற்போது இந்தித்திணிப்பாக மக்கள் விருப்பத்துக்கு எதிராக இந்த ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக பாமர கிராமப்புற மக்களிடம் இந்த இந்தி திணிப்பு பல்வேறு விளைவுகளை உருவாக்கும். இதனை புதுவை சிந்தனையாளர்கள் பேரவை கடுமையாக எதிர்க்கிறது.உடனடியாக இந்த ஆணை திரும்பப்பெற வேண்டும்.

இந்த நாடு தழுவிய அரசு மக்கள் தொடர்பு சாதனங்களில் நடைபெறும் இந்தித்திணிப்பை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமுக ஜனநாயக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் தங்களது வலுவான கண்டன அறிக்கை கள் மூலம் துடைத்தெறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News