கோப்பு படம்.
நர்சிங் நிர்வாக இடங்களுக்கும் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை
- மாணவர்கள் கல்வி கட்டணத்தை சென்டாக் நிர்வாகத்திலேயே கட்டி தேர்வாகும் இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள இந்த ஆண்டு முதல் நடை முறைபடுத்த வேண்டும்.
- கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்க முடியும்.
புதுச்சேரி:
புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் விண்ணப்பங்களை வெளியிட்டு நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வை காலத்தோடு நடத்தி முடிக்க வேண்டும். நர்சிங் படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தை யும் சென்டாக் நிர்வாகமே கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்.
சென்டாக் மூலம் பொறியியல் படிப்புக்கு தேர்வாகும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பும், கல்லூரியும் கிடைக்கும் வரை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும்போது மாறி மாறி கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றது. இதனால் மாணவர்கள் தேர்வாகும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி தனியாக பணம் கட்டி சேரும் சூழ்நிலை உருவாகிறது.
ஒரு கல்லூரியிலிருந்து மற்றோரு கல்லூரிக்கு தேர்வாகி மாறி செல்லும் போதும் கல்லூரி நிவாகங்கள் கட்டிய பணத்தை திருப்பி தரும் போதும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தும் ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்க கால தாமதம் ஏற்படுத்துகின்றனர்.
ஆகவே பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை சென்டாக் நிர்வாகத்திலேயே கட்டி தேர்வாகும் இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள இந்த ஆண்டு முதல் நடை முறைபடுத்த வேண்டும்.
இதனால் மாணவர்களுக்கு மன உலைச்சல், பணவிரையம், காலதாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும் அதுமட்டுமின்றி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.