புதுச்சேரி

கோப்பு படம்

நுண் கலை படிப்புகளுக்கு சென்டாக் மாணவர்கள் சேர்க்கை

Published On 2023-05-24 10:47 IST   |   Update On 2023-05-24 10:47:00 IST
  • புதுவையில் உள்ள தொழில், கலை, நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது
  • நீட்தேர்வு அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

புதுச்சேரி:

புதுவையில் உள்ள தொழில், கலை, நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

நீட்தேர்வு அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

மாணவர்கள் என்ஜினீயரிங், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை படிப்புகளில் இசை, கலை படிப்புகளில் சேர சென்டாக் இணையதளத்தில் இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூன் 10-ந் தேதி மாலை 6 மணி வரை சமர்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்களை சென்டாக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News