புதுச்சேரி

கோப்பு படம்.

பேனர் வைக்க உடந்தையான அதிகாரிகள் மீது நடவடிக்கை

Published On 2023-09-09 05:25 GMT   |   Update On 2023-09-09 05:25 GMT
  • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
  • பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பேனர் வைப்பதற்கு ஏற்கனவே விதிமுறைகளும், சட்டமும் இருந்தபோதிலும் அதனை ஆளும் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.

அதே வேளையில் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினை களுக்கு வைக்கப்படும் சிறிய தட்டிகள் கூட சட்டத்தைச் சொல்லி உடனே அகற்றப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் அதிகார வர்க்கத்தின் ஆணவமுமே காரணமாக இருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பதால் பல்வேறு பாதிப்புகளை மக்கள், சிறு வணிகர்கள் சந்தித்து வருகிறார்கள்.

எனவே சாலையோரம் மற்றும் சாலை தடுப்பு சுவரில் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனர் வைப்பதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News