புதுச்சேரி

கோப்பு படம்.

அப்பா பைத்தியம் சுவாமிகள் 164-வது பிறந்தநாள் விழா

Published On 2023-05-10 12:30 IST   |   Update On 2023-05-10 12:30:00 IST
  • அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
  • மகா தீபாராதனையும், அன்னமளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குரு ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு நாளை 164-வது பிறந்தநாள்.

இதையொட்டி சேலம் சூரமங்கலம் ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் கோவில்  4.30 மணி முதல் சிறப்பு பூஜையும், அபிஷேக ஆராதனையும், அன்னமளிப்பு விழாவும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர், திருமகள் வழிபாடு, சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி, பேரொளி வழிபாடுகள் நடக்கிறது.

காலை 7.30 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு அன்னமளிப்பு விழாவும் நடக்கிறது.

இதேபோல முதல்- அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்.

Tags:    

Similar News