மழையினால் சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ள காட்சி.
சேறும் சகதியுமாக மாறிய வார சந்தை
- மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறு வது வழக்கம்.
- இந்த மாட்டு சந்தையை யொட்டி சந்தை பகுதியில் பல்வேறு விதமான கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறு வது வழக்கம்.
இந்த மாட்டு சந்தையை யொட்டி சந்தை பகுதியில் பல்வேறு விதமான கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இதனால் விலை குறைவாகவும் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை அதிகளவில் வாங்கி செல்வர்.
இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு சந்தை பகுதிக்கு யாரும் வரவில்லை. இதனால் வியாபாரிகள் விற்பனைக்கு எடுத்து வந்த காய்கறிகள் மற்றும் பொருட்களை தங்களது வாகனங்களிலேயே திருப்பி எடுத்துச் சென்றனர்.