புதுச்சேரி

கோப்பு படம்.

பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-05-01 09:08 GMT   |   Update On 2023-05-01 09:08 GMT
அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை காசிம் சாலையை சேர்ந்தவர் முகம்மது ஷரீப். இவரது மகன் முகமது ஷமீர் (வயது 27) சென்னையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார்.

சில நாட்களாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இவர் மோட்டார் சைக்கிளில் இரவு டிபன் சாப்பிடுவ தற்காக புதுவை பஸ் நிலையம் அருகே சென்றார், அவருக்கு பின்னால் வேறோரு வாகனத்தில் அவரது நண்பர் முகமது பைசல் சென்றுள்ளார்.

மறைமலையடிகள் சாலையில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்றபோது நெல்லித்தோப்பு சிக்னலில் முகமது ஷமீர் அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி முகமது ஷமீர் கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அவரது நண்பர் முகமது பைசல் உடனே அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News