புதுச்சேரி

கோப்பு படம்.

சிறைக்கு கஞ்சா கடத்திய கைதி

Published On 2023-06-10 14:05 IST   |   Update On 2023-06-10 14:05:00 IST
  • அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.
  • நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர்.

போக்சோ வழக்கில் சிறையில் உள்ள தவக்குப்பத்தைச் சேர்ந்த புண்ணியகோடி மகன் பாலமுருகன் (வயது 23), போலீஸ் பாதுகாப்புடன் வழக்கு விசாரணைக்காக  புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கு விசாரணை முடிந்து பின்னர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிறை காவலர்கள் அவரை வழக்கம் போல் சோதனை செய்தனர். சோதனையில் பாலமுருகனின் உடலில் வழக்கத்திற்கு மாறான மாற்றம் இருந்தது.

சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். கைதி பாலமுருகனிடம் சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்திய போது அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே பாலமுருகனை கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று அவரது உடலை ஸ்கேன் செய்தனர்.

அப்பொழுது அவரது வயிற்றின் அடிப்பகுதியில் மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

அப்போதுதான் கைதி பாலமுருகன் நடந்தவற்றை கூறினார், பல்வேறு கொலை வழக்குகளில் சிறையில் உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன் உத்தரவின் அடிப்படையில் கைதி பாலமுருகன் கோர்ட்டில் ஆஜராகும் பொழுது ஒருவர் 50 கிராம் கஞ்சாவை கொடுத்ததும், அந்த கஞ்சா பொட்டலத்தை நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் தனது ஆசனவாய் வழியாக செலுத்தியதும் தெரிய வந்தது. நடிகர் சூர்யா படித்த அயன் திரைப்படத்தில் போதை பொருளை வெளியே எடுப்பதற்காக 'இனிமா' என்னும் மருந்தை கொடுப்பதை போல் கைதி பாலமுருகனுக்கும் மருத்து வர்கள் 'இனிமா' கொடுத்து வயிற்றின் அடிப்பகுதியில் இருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை வெளியே எடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகள் பாலமுருகன், ஜனா என்கிற ஜனார்த்தனன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

 நீதிமன்ற உத்தரவு பெற்று இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் நீதிமன்றத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்தது யார் என்பது குறித்தும் நீதி மன்றத்தில் பதிவா கியுள்ள சி.சி.டி.வி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News