புதுச்சேரி

கோப்பு படம்.

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை கலைக்க திட்டமிட்ட சதி

Published On 2023-05-26 10:41 IST   |   Update On 2023-05-26 10:41:00 IST
  • வையாபுரி மணிகண்டன் ஆவேசம்
  • ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநில இளைஞர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை முதல்-அமைச்சர் செய்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.

புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 8 ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இங்கு பல துறைகளில் டாக்டர்கள் இல்லை. பணிபுரியும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. மாணவர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல்வேறு அடிப்படை யான, அத்தியா வசியமான தேவை களைக்கூட கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்ய வில்லை. இதுகுறித்து மருத்துவ ஆணையத்துக்கு பல புகார்கள் சென்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாக சீர்கேடுகளை களையும்படி புதுவை அரசுக்கு இந்திய மருத்துவ ஆணையம் 6 மாதம் முன்பே எச்சரித்துள்ளது. ஆனால் சுகாதாரதுறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேண்டுமென்றே, திட்டமிட்டு சதி செய்து அரசு மருத்துவக் கல்லூரி யின் சீர்கேடுகளை களைய வில்லை.

அதேநேரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கூடுதலாக 200 மருத்துவ இடங்களை பெற்றுள்ளன. புதுவை அரசு மருத்துவக்கல்லூரியை மூட வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அரசே திட்டமிட்டு சதி செய்துள்ளது. இந்த சதியில் மருத்துவக் கல்லூரி அதிகாரி களுக்கும் தொடர்புள்ளது. புதுவை அரசின் 180 மருத்துவ இடங்களை ரத்து செய்ய பல கோடி கைமாறியுள்ளதாக மருத்து வத்துறை அதிகாரி களே குற்றம்சாட்டுகின்றனர். இது மருத்துவம் படிக்க வேண்டும் என கனவோடு படித்த புதுவை மாநில ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் துரோகம்.

கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கனவே மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே உடனடியாக இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.

பிரதமரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News