புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு பள்ளியில் மாணவர்கள் திடீர் மோதல்- கல்லூரி மாணவனுக்கு கத்திகுத்து

Published On 2023-08-20 04:06 GMT   |   Update On 2023-08-20 04:07 GMT
  • படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
  • வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்ட போது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர்.

இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்த போது மோதலில் ஈடுபட்டனர்.

இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18)எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோரை தேடிவந்தனர்.

இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News