புதுச்சேரி

பனை விதை விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்த காட்சி.

null

76 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது

Published On 2023-09-06 05:20 GMT   |   Update On 2023-09-06 05:56 GMT
  • கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
  • கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரிட்டீஸ், ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி ஓயிட் டவுன், மழைத்துளி உயிர்த்துளி அமைப்புகளுடன் இணைந்து தமிழரின் தேசிய மரமான பனைமரம் மீட்பு 6-ம் ஆண்டு தொடர் பயணத்தின் தொடக்கம், இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 ஆயிரம் பனை விதைகளை புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் பனை விதை நடவு விழா அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிழக்கு கடற்கரையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி தலைவர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

வீராம்பட்டினம் கிராம மக்கள் குழு தலைமை தாங்கினார். வண்ணங்களின் சங்கம் பிரபாகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு முதல் பனை விதை நடவு பணியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி, அரியாங்குப்பம் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செவிலியர் கல்லூரி முதல்வர் பரிமளா தமிழ்வாணன், கிளப் ஆப் புதுச்சேரி ஓயிட் டவுன் தலைவர் திருஞானம், புதுச்சேரி நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி தொகுத்து வழங்கினார்.

புதுச்சேரி கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர். முடிவில் மண்வாசம் இளைஞர் மன்ற தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். 

Tags:    

Similar News