புதுச்சேரி

சாலையின் குறுக்கே இடைவிடாது போடப்பட்டுள்ள இரும்பு கம்பிகள்.

4 வழிசாலையில் இரும்பு கம்பிகளை அகற்ற வேண்டும்

Published On 2023-05-05 14:15 IST   |   Update On 2023-05-05 14:15:00 IST
  • விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • இந்த நிலையில் மதகடிப்பட்டிலிருந்து பங்கூர் பகுதி வரை 4 வழி சாலை போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதகடிப்பட்டிலிருந்து பங்கூர் பகுதி வரை 4 வழி சாலை போடப்பட்டுள்ளது.சாலையின் இந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு நடந்து செல்ல முடியாதவாறு இரும்பு கேட்டால் அடைக்கப்படுகிறது. இதனால் கிராமப் பகுதியில் இருந்து 4 வழி சாலையை இணைக்கும் பகுதியில் இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளதால் சாலையின் மறு பகுதிக்கு பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று சாலையின் மறு பகுதிக்கு வர முடிகிறது. இதனால் வயதானவர்கள் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது பணி நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப் பகுதியில் இருந்து 4 வழி சாலையை இணைக்கும் பகுதியில் இரும்பு கம்பிகளை அமைக்காமல் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News