புதுச்சேரி

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம் நடந்த காட்சி. 

null

திருக்காமீஸ்வரர் கோவிலில் 20-ந் தேதி ஆடிப்பூர தேரோட்டம்

Published On 2023-07-13 10:41 IST   |   Update On 2023-07-13 11:35:00 IST
  • 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
  • விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 20-ந் தேதி காலை 8.15 மணிக்கு நடக்கிறது.

மறுநாள் 21-ந் தேதி தீர்த்தவாரி, வளையல் உற்சவம், 22-ந் தேதி தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

நாள்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News