எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்த காட்சி.
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
- ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சுல்தான்பேட்டை பஞ்சாயத்தில் கொம்பாக்கம் வாய்க்கால் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் செலவில் தூர்வாருதல், அப்துல் கலாம் நகரில் ரூ.14 லட்சத்து 46 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், ஜாகீர் உசேன் நகரில் ரூ.9 லட்சத்து 73 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், சுல்தான்பேட்டை பகுதியில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் செலவில் உறிஞ்சுக் குழிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவரான இரா.சிவா செம்மன் சாலை, வாய்க்கால் தூர்வாரும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சித்தார்தன், பணி ஆய்வாளர் விஜய், அருணாசலம், கிராம திட்ட ஊழியர்கள் முனுசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஜலால் ஹனீப், ஹாஜி முகமது, சிராஜிதீன், முகம்மது சுல்தான், கமாலுதீன், அன்சாரி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜாமத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.