செய்திகள்
விராட் கோலி கேன் வில்லியம்சன்

2008 U-19 உலகக்கோப்பையை நியாபகப்படுத்தும் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி

Published On 2019-07-08 11:06 GMT   |   Update On 2019-07-08 11:06 GMT
2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் விராட் கோலி - கேன் வில்லியம்சன் நேருக்குநேர் மோதியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டம் 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நியாபகப்படுத்துகிறது.

மலேசியாவில் 2008-ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.



முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. மழைக்காரணமாக இந்தியாவுக்கு 43 ஓவரில் 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தை நியாபகப் படுத்துகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், தற்போதும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Tags:    

Similar News