செய்திகள்
ரோகித் சர்மா

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஹிட்மேன்

Published On 2019-07-08 06:47 GMT   |   Update On 2019-07-08 06:47 GMT
உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடிக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மான்செஸ்டர்:

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினத்துடன் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிந்தன.

‘லீக்’ முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘நாக்அவுட்’ போட்டிகள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார்.     

உலக கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 2003 ஆம் ஆண்டு 673 ரன்கள் எடுத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மேத்யூ கெய்டன் 659 ரன்கள் எடுத்திருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ரோகித்சர்மா 5 சதம், ஒரு அரை சதத்துடன் 647 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 2-வது இடத்தில் உள்ளார்.



2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் விபரம்:-

ரோகித் சர்மா 647 ரன்கள் - 5 சதம், 1 அரை சதம் (8 ஆட்டங்கள்)
டேவிட் வார்னர் 638 ரன்கள் - 3 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
சகிப் அல்ஹசன் 606 ரன்கள் - 2 சதம், 5 அரை சதம் (8 ஆட்டங்கள்)
ஆரோன் பிஞ்ச் 507 ரன்கள் - 2 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
ஜோ ரூட் 500 - 2 சதம், 3 அரை சதம் (9 ஆட்டங்கள்)
கனே வில்லியம்சன் 481 ரன்கள் - 2 சதம், 1 அரை சதம் (8 ஆட்டங்கள்)
பாபர் ஆசம் 474 ரன்கள் - 1 சதம், 3 அரை சதம் (8 ஆட்டங்கள்)
பிரிஸ்டோவ் 462 ரன்கள் - 2 சதம், 2 அரை சதம் (9 ஆட்டங்கள்)
விராட் கோலி 441 ரன்கள் - 5 அரை சதம் (8 ஆட்டங்கள்)

டு பிளிசிஸ் 387 ரன்கள் - 1 சதம், 3 அரை சதம் (8 ஆட்டங்கள்)
Tags:    

Similar News