செய்திகள்
கவாஜா

ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா விலகல்: மேத்யூ வடே சேர்ப்பு

Published On 2019-07-07 19:06 IST   |   Update On 2019-07-07 19:06:00 IST
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது.

அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலியா. மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

Similar News