செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீட்சில் இன்று நடைபெறவுள்ள 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியா அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இலங்கை அணி களமிறங்க உள்ளது.
இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மொகமது ஷமி, சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.