செய்திகள்
ரோகித் சர்மா

ஒரே உலகக்கோப்பையில் 500 ரன், நான்கு சதம்: ஒட்டுமொத்த சாதனைகளிலும் இடம் பிடித்தார் ஹிட்மேன்

Published On 2019-07-02 11:40 GMT   |   Update On 2019-07-02 11:40 GMT
சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு உலகக்கோப்பையில் 500 ரன்கள் அடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஹிட்மேன் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ள ரோகித் சர்மாவை ரசிகர்கள் செல்லமாக ‘ஹிட்மேன்’ என்று அழைத்து வருகின்றனர். ஹிட்மேன் இந்த உலகக்கோப்பையில் நம்பமுடியாத அளவிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

இன்றைய போட்டியிலும்  சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் நான்கு சதங்கள் விளாசியுள்ளனர்.



மேலும் இன்றைய போட்டியில் 96 ரன்கள் அடித்திருக்கும்போது 533 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் உலகக்கோப்பையில் 500 ரன்களை தாண்டியிருந்தார். அதன்பின் தற்போது ரோகித் சர்மா 500 ரன்களை தாண்டி சாதனைப் படைத்துள்ளார்.

மேலும், இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். வார்னர் 516 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். 
Tags:    

Similar News