செய்திகள்
ரிஷப் பந்த்

ஆடும் லெவனில் ரிஷப் பந்துக்கு தொடர்ந்து இடம்: பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் சொல்கிறார்

Published On 2019-07-01 15:39 GMT   |   Update On 2019-07-01 15:39 GMT
இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கிய ரிஷப் பந்த் இந்திய ஆடும் லெவன் அணியில் நீடிப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பந்த் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டார். ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கியதற்காக இந்திய அணி நிர்வாகம் மீது விமர்சனம் எழும்பியது. 29 பந்தில் 32 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த், அதிரடியாக விளையாட முயற்சிக்கும்போது ஆட்டமிழந்தார்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த், தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘ஷிகர் தவான் காயத்தால் வெளியேறிய பின், அணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் இல்லையே என்று எண்ணியது. வலது - இடது கம்பினேசனால் பந்து வீச்சாளர்களை அப்செட் ஆக்குவதற்கான தந்திரம்தான் அது. அடில் ரஷித் அதிகமான ஓவர்கள் வீசவில்லை.

ரிஷப் பந்த் ஓரளவிற்கு சிறப்பாகவே பேட்டிங் செய்தார். சிறந்த வகையிலான ஒன்றிரண்டு ஷாட்ஸ் ஆடினார். ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஆகவே, நாங்கள் அடுத்த போட்டியிலும் ரிஷப் பந்துக்கு ஆதரவாக இருப்போம்.



அவர்கள் எங்களுடன் அணியுடன் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் ஒருவர். அவர் தற்போதுதான் அணியில் சேர்ந்தவர் இல்லை. எங்களுடன் இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் செலவழித்து வருகிறார். சர்வதேச லெவல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அசத்தி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு சற்று புதிது.

மிடில் ஆர்டர் மற்றும் வலது - இடது கை காம்பினேசன் குறித்து அவருக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவரால் அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்க முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News