சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த பராசக்தி

Published On 2026-01-20 20:17 IST   |   Update On 2026-01-20 20:17:00 IST
  • பராசக்தி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமரன், மதராசி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிவகார்த்திகேயனின் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலான படப்பட்டியலில் பராசக்தி இணைந்துள்ளது.

இதற்கு முன்னதாக அமரன் (300 கோடி ரூபாய்க்கு மேல்), மதராசி (100 கோடி ரூபாய்க்கு மேல்), டாக்டர் 100 கோடி ரூபாய்க்கு மேல், டான் (125 கோடி ரூபாய்க்கு மேல்) 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது.

மதராசி, அமரன், பராசக்தி என தொடர்ந்து 3 படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

Tags:    

Similar News