செய்திகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இந்தியாவின் தோல்வியும், அணிகளின் அரையிறுதி எதிர்பார்ப்பும்- ஒரு அலசல்

Published On 2019-07-01 11:05 GMT   |   Update On 2019-07-01 11:05 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததால் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தோல்வியடைய லீக் ஆட்டம் சூடுபிடித்தது. இங்கிலாந்து கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்து. இங்கிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தது. இதனால் இங்கிலாந்து தோல்வியடைய வேண்டும் என்று ஆசிய கண்ட ரசிகர்கள் விரும்பினர்.



இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தினால் இங்கிலாந்து நிலை பரிதாபத்திற்குள்ளாகும் என்ற நிலை இருந்தது. ஆனால்  இந்தியாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 8-ல் ஐந்து வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தின் வெற்றி பாகிஸ்தான், வங்காள தேச அணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் 8-ல் நான்கு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றின் மூலம் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்காள தேசம் 7-ல் தலா மூன்று வெற்றி தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 7 புள்ளிகள் பெற்றுள்ளது.



பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டிதான் உள்ளது. இதில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. பாகிஸ்தான் வங்காள தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் ரன்ரேட் பார்க்கப்படும்.  ஒருவேளை நியூசிலாந்து தோல்வியடைந்து, பாகிஸ்தான் வங்காள தேசத்தை வீழ்த்தினால் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் ரன்ரேட் பார்க்கப்படும்.



வங்காள தேசத்திற்கு இரண்டு போட்டிகள் உள்ளன. நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை வீழ்த்தி, பாகிஸ்தானையும் வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் போட்டியில். இந்தியாவுக்கு எதிராக வங்காள தேசம் வெற்றி பெற்றால், இந்தியா கட்டாயம் இலங்கையை வீழ்த்த வேண்டும். ஒருவேளை இந்தியா இலங்கையிடமும் தோல்வியடைந்தால் இந்தியாவும் ரன்ரேட்  அடிப்படையில்தான் அரையுறுதிக்கு முன்னேற முடியும்.

இதனால் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காள தேச அணிகள் அரையிறுதி வாய்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
Tags:    

Similar News