செய்திகள்

எங்களால் எதையும் செய்ய முடியும்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது

Published On 2019-06-26 11:07 GMT   |   Update On 2019-06-26 11:07 GMT
மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில், அதை எங்களால் செய்ய முடியும் என பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டியுடன் சேர்த்து மூன்று போட்டிகளிலும் வெற்றில் பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். சீதோஷ்ணநிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அது நம் கையில் இல்லை. முகமது அமிர் சூப்பர் பார்முக்கு வந்தது மகிழ்ச்சி. அதேபோல் மற்ற பந்து வீச்சாளர்களும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் அணியால் எதையும் செய்ய முடியும். நாங்கள் அடிமேல் அடி வைத்து ஒவ்வொரு போட்டியாக சென்று கொண்டிருக்கிறோம். ஒரு அணியாக நாங்கள் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News