செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிராக ஜேசன் ராய் அதிரடி சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்தார்

Published On 2019-06-08 17:24 IST   |   Update On 2019-06-08 17:24:00 IST
வங்காள தேச அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் அதிரடி சதம் விளாசியதுடன், சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 19.1 ஓவரில் 128 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 50 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடிய ஜேசன் ராய் 92 பந்தில் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் 77 இன்னிங்சில் 9 சதங்கள் அடித்ததன் மூலம் விரைவாக 9 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அம்லா (52)), டி காக் (53), பாபர் ஆசம் (61), தவான் (72), முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

Similar News