ஜெர்மனியில் ஜெலன்ஸ்கி.. ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி கேட்கிறார்!
- அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது.
- மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றார்.
ரஷியவாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைத் தேடும் வகையில் ஜெலென்ஸ்கி ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவை பெறும் வகையில் இன்று ஜெலன்ஸ்கி ஜெர்மனி சென்றார். அங்கு தலைநகர் பெர்லினில் புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்கிறார்.
அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு ஜெர்மனியும் பிற முக்கிய நட்பு நாடுகளும் இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளையும் விதிக்கபோவதில்லை என்று மெர்ஸ் திங்களன்று கூறினார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றதில் இருந்து மெர்ஸ், போர்நிறுத்தத்தைப் கொண்டுவரவும், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவை அதிகரிக்கவும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.