உலகம்

உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

Published On 2025-07-18 08:08 IST   |   Update On 2025-07-18 08:09:00 IST
  • உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.
  • பிரதமர் மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மார்ச் 2020 முதல் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிஹால்,உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாகியவர். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான போர் தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தலைவர்கள் மாற்றப்பட்டாலும், பிரதமர் மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Tags:    

Similar News