உலகம்

புதினுடன் பேச்சுவார்த்தை சுமூகம்... இந்தியா மீதான வரி குறித்து டிரம்ப் கொடுத்த புது அப்டேட்

Published On 2025-08-16 11:02 IST   |   Update On 2025-08-16 11:02:00 IST
  • எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
  • திரைமறைவில் இருந்து சூழ்ச்சிகளை ஏற்படுத்தும் செயலில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடக் கூடாது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. திரை மறைவில் இருந்து சூழ்ச்சிகளை ஏற்படுத்தும் செயலில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடக் கூடாது என்றார்.

இதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷிய எண்ணெய் வாங்குபவர்கள் மீதான வரிகள் குறித்து பேசினார்.

இந்த நாடுகள் மீதான வரிகள் குறித்து 2 முதல் 3 வாரங்களில் யோசிக்க வேண்டியிருக்கும், ஆனால் உடனடியாக அல்ல. ஒருவேளை இந்தியா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

Tags:    

Similar News